அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே விவோ நிறுவனத்தின்ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டிய

மேலும் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

விவோ Y21T

Vivo Y21T (Midnight Blue, 4GB RAM, 128GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
₹16,490.00
₹19,990.00
18%

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்கமுடியும். விவோ Y21T ஸ்மார்ட்போம் டூயல் சிம் (நானோ) உடன் வருகிறது. இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo Y21T மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது, மேலும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.Vivo Y21T ஆனது f/1.8 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.ஸ்மார்ட்போனில் 128GB உள் சேமிப்புஉள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக இது ஒரு பிரத்தியேக ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Vivo Y21T இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும்
உள்ளது. Vivo Y21T ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் 164.26x76.08x8mm நடவடிக்கைகள் மற்றும் 182 கிராம் எடை கொண்டது.

விவோY15 ஸ்மார்ட்போன்

(Renewed) Vivo Y15 (Burgundy Red, 4GB RAM, 64GB Storage) Without Offer
₹12,499.00
₹18,999.00
34%

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y15 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விவோ Y15 ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. விவோ Y15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் எனமூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்தஸ்மார்ட்போனில்
உள்ளது. விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.

விவோ எஸ்1

(Renewed) Vivo S1 (Blue, 4GB RAM, 128GB Storage) Without Offer
₹13,699.00
₹20,990.00
35%

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,699-விலையில் வாங்க முடியும். விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். விவோ எஸ்1
ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது.. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது. விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y1s

Vivo Y1s (Aurora Blue, 3GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹12,980.00
₹18,500.00
30%

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y1s ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,980-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.22' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் மீடியாடெக் பி35 ஆக்டோ-ஆகார் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y1s மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 10
இயங்குதளம், 4030 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y1s மாடல்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X