Home
Deal of the day

அமேசான்: கம்மி விலையில் கிடைக்கும் அசத்தலான ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

அமேசான் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான்:கம்மி விலையில் கிடைக்கும் அசத்தலான ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஆப்பிள் ஐபோன், ஒன்பிளஸ், ரெட்மி, சாம்சங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் கம்மி விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ15எஸ்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப்டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1520 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபிசேமிப்பு வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை வசதி இருக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்
ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது.
13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. செல்பி வசதிக்கு 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ74 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 5ஜி,4ஜி எல்டிஇ,
வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளைகொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ55

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ55 பல சக்தி வாய்ந்த அம்சங்களைகொண்டிருக்கிறது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்குறைபாடற்ற அனுபவத்தை அளிக்கிறது. ஒப்போ ஏ55 முக்கிய அம்சம் அதன் சக்தி வாய்ந்த பேட்டரி ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது மிகவும் மெல்லிய வடிவில் இருந்தாலும் அதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. ஒப்போ ஏ55 சாதனத்தில் ஒப்போவின் பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் கேமராவை 12.5 எம்பி லென்ஸுக்கு மாற்றம் செய்வதற்கான தேர்வும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த வெளிச்சத்திலும் அதிக நுட்பமான காட்சிகளை பதிவு செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் அதி உயர் திறன் கொண்ட காட்சிகளை தேடுகிறீர்கள் என்றால் இதில் இருக்கும் 50 எம்பி கேமரா லென்ஸ் பெரிதளவு பயன்படுகிறது. நைட் மோட் போன்ற அம்சங்களும் இதில் இருக்கிறது. இரவு காட்சிகளில் படமெடுக்கையில் சிறந்தவையாக இருக்கிறது. செல்பி என வரும்போது, ஒப்போ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செல்பி அம்சங்களை வழங்குகிறது. ஒப்போ ஏ55 சாதனத்தின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது.

விவோ ஒய்33 எஸ்


8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 14 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸமார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர், ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார்,இ-காமர்ஸ் மற்றும் கைரோஸ்கோப் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன். இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் எடை 182 கிராம் ஆகும். மேலும் டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன்.

English summary
Vivo and Oppo smartphones available at discounted prices on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X