அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ, சியோமி ஸ்மார்ட்போன்கள்.!
அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஒப்போ, சியோமி ஸ்மார்ட்போன்கள்.!
ஒப்போ, சியோமி நிறுவனங்கள் தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சியோமி 11 லைட் என்இ 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.26,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி, MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4250 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, டூயல் ஸ்பீக்கர் ஆதரவு, கைரேகை சென்சார் என பல அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது சியோமி 11 லைட் என்இ 5ஜி மாடல். சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே மொத்தம் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ4 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.
MI 11X 5G ஸ்மார்ட்போன்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட MI 11X 5G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் AMOLED Dot டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம்,120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட், 4520 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த MI 11X 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.அதேபோல் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த MI 11X 5G ஸ்மார்ட்போன்.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, 2.2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி95 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications