Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகமாக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y21T

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்கமுடியும். விவோ Y21T ஸ்மார்ட்போம் டூயல் சிம் (நானோ) உடன் வருகிறது. இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo Y21T மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது, மேலும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.Vivo Y21T ஆனது f/1.8 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.ஸ்மார்ட்போனில் 128GB உள் சேமிப்புஉள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக இது ஒரு பிரத்தியேக ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Vivo Y21T இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. Vivo Y21T ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 164.26x76.08x8mm நடவடிக்கைகள் மற்றும் 182 கிராம் எடை கொண்டது.

விவோ Y20

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,550-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளவந்துள்ளது. அதாவது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும்720 x 1600 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்டையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த விவோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ எஸ்1

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது.. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது. விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y20G


4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி + 2எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

English summary
The Best Vivo Smartphones Available at Budget Prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X