அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
ரெட்மி, ஒப்போ, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் படஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.15,990-விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 5ஜி,4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ53
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 90Hz refresh rate வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விவோ Y20G
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி + 2எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரெட்மி நோட் 10எஸ்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது


Click it and Unblock the Notifications