அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒன்பிளஸ், விவோ ஸ்மார்ட்போன்கள்.!
ரெட்மி, ஒன்பிளஸ், நோக்கியா நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒன்பிளஸ், விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.
ரெட்மி நோட் 11டி 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,412பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் OxygenOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 33W SuperVOOC வயர்டு சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, 3.5எம்எம் ஆடியோ ஜாக், புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ Y12G
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y12G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். விவோ Y12G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ உள்ளிட்ட பல வசதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவோ Y12G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y12G ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இதன் கேமராவைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.விவோ Y12G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. விவோ Y12G ஸ்மார்ட்போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.
Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.