அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும்; சிறந்த விவோ, போக்கோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
விவோ, போக்கோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற வசதிகளுகக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன இந்த இரண்டு நிறுவனங்கள். அதேபோல் இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த விவோ, போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோY21
விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
விவோ Y21T
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்கமுடியும். விவோ Y21T ஸ்மார்ட்போம் டூயல் சிம் (நானோ) உடன் வருகிறது. இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo Y21T மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது, மேலும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.Vivo Y21T ஆனது f/1.8 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.ஸ்மார்ட்போனில் 128GB உள் சேமிப்புஉள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக இது ஒரு பிரத்தியேக ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Vivo Y21T இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. Vivo Y21T ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 164.26x76.08x8mm நடவடிக்கைகள் மற்றும் 182 கிராம் எடை கொண்டது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,399-விலையில் வாங்க முடியும். போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்த்த 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 700 SoC சிப்செட் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும்MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எம்3 ப்ரோ 5ஜி சாதனம். 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
போக்கோ எம்2 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்;க முடியும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications