அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!
ரெட்மி, நோக்கியா, ஒப்போ நிறுவனங்கள் கம்மி விலையில் பல அட்டகாசமன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்
லாவா எக்ஸ்2
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.6,599-விலையில் வாங்க முடியும்.Lava X2 ஆனது 6.5' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 20:9 விகிதத்துடன் வருகிறது. அதன் உரத்த ஆடியோவுடன் பயனர்களுக்கு அதிவேகமான பார்வை மற்றும் கேட்கும் அனுபவத்தை இது வழங்குகிறது. இந்த புதிய Lava X2 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ ஆக்டா கோர் சிப்செட் உள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா விவரக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டால், லாவா X2 பட்ஜெட்டில் புகைப்பட பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், ஸ்மார்ட்போன் அதன் 8 எம்பி இரட்டை பின்புற கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா மூலம் அதிர்ச்சியூட்டும் படங்களை கிளிக் செய்கிறது. Lava X2 ஸ்மார்ட்ஃபோனில் ஒரு பெரிய 5000 mAh பேட்டரி ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது. புளூடூத் பதிப்பு 5.0, வைஃபை, டூயல் 4ஜி சிம் ஆதரவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஓடிஜி ஆதரவு ஆகியவை சாதனத்தில் உள்ள இணைப்பு விருப்பங்களில் அடங்கும்.
நோக்கியா சி01 பிளஸ்
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.6,199-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம், 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc SC9863a பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ்உட்பட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 5 வாட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. ஒப்போ ஏ31 சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications