Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் விவோ, ஒப்போ, மோட்டோ, நோக்கியா போன்ற பல நிறுவனங்கள் இந்த ஆண்டு பட்ஜெட் விலையில் அதிகமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். 4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,498-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி10 பவர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ ஜி10 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,985-விலையில் வாங்க முடியும். 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் எனப் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி10 ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் +2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 10W வேகமான சார்ஜிங் ஆதரவு, 6,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y20


4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளவந்துள்ளது. அதாவது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும்720 x 1600 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்டையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த விவோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

English summary
The best smartphones available at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X