அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், நோக்கியா, ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!
சாம்சங், நோக்கியா,ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கனை அறிமுகம் செய்வதால், அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், நோக்கியா, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா ஜி20
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.
நோக்கியா 5.4
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். 6.4-இன்ச் டிஸ்பிளே, 800 நிட்ஸ் பிரைட்நஸ், கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் ப்ராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி ரியர் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், ஆடியோவில் டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்.
ரெட்மி நோட் 10டி 5ஜி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, கொரில்லா கிளாஸ், மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி.


Click it and Unblock the Notifications