Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

ஒப்போ, மோட்டோ, சாம்சங் நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கனை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, மோட்டோ, சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்

மோட்டோ ஜி22

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியுடன் IMG PowerVR GE8320 GPU வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காஸ்மிக் பிளாக், ஐஸ்பர்க் ப்ளூ, மின்ட் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 20 வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் மற்றும் பல சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, எஃப்எம் ரேடியோ, ஜிபிஎஸ்ஃஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மோட்டோ இ40

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,200-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 1.8GHz யூனிசோக் T700ஆக்டா-கோர் சிப்செட் மூலம்
4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மோட்டோ இ 40 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ இ40 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல்
தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக்
கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ54

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்கமுடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். 6.4-இன்ச் டிஸ்பிளே, 800 நிட்ஸ் பிரைட்நஸ், கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் ப்ராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி ரியர் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், ஆடியோவில் டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்.

English summary
The Best samsung, Moto and Oppo smartphones to Buy at Budget Prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X