அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
ஒப்போ, ரியல்மி, லாவா நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம்
மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட octa core பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ12
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல். வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது கேலக்ஸி எம்21 2021.
லாவா எக்ஸ்2
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா எக்ஸ்2 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.6,499-விலையில் வாங்க முடியும். Lava X2 ஆனது 6.5' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் நாட்ச் டிஸ்ப்ளேவுடன் 20:9 விகிதத்துடன் வருகிறது. அதன் உரத்த ஆடியோவுடன் பயனர்களுக்கு அதிவேகமான பார்வை மற்றும் கேட்கும் அனுபவத்தை இது வழங்குகிறது. இந்த புதிய Lava X2 ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹீலியோ ஆக்டா கோர் சிப்செட் உள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா விவரக்குறிப்புகளைக் கருத்தில் கொண்டால், லாவா X2 பட்ஜெட்டில் புகைப்பட பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், ஸ்மார்ட்போன் அதன் 8 எம்பி இரட்டை பின்புற கேமரா மற்றும்
5 எம்பி செல்ஃபி கேமரா மூலம் அதிர்ச்சியூட்டும் படங்களை கிளிக் செய்கிறது. Lava X2 ஸ்மார்ட்ஃபோனில் ஒரு பெரிய 5000 mAh பேட்டரி ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது. புளூடூத் பதிப்பு 5.0, வைஃபை, டூயல் 4ஜி சிம் ஆதரவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஓடிஜி ஆதரவு ஆகியவை சாதனத்தில் உள்ள இணைப்பு விருப்பங்களில் அடங்கும்.
ஒப்போ ஏ15எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.10,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1520 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை வசதி இருக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. செல்பி வசதிக்கு 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications