Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங், ரெட்மி, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் இந்தியாவில் இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,900-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்.

விவோ Y73

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன்.

விவோ Y21


4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

English summary
The Best Redmi, Vivo and samsung smartphones to Buy at Budget Prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X