அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மி,ஒப்போ, நோக்கியா நிறுவனங்கள் தொடர்ந்து அருமையான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளன.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, ஒப்போ, நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ54

Oppo A54 (Starry Blue, 4GB RAM, 64GB Storage) with No Cost EMI & Additional Exchange Offers
₹14,990.00

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை
வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

ஒப்போ ஏ16கே

OPPO A16k (Blue, 3GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹10,490.00
₹13,990.00
25%

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன். சன்லைட் டிஸ்ப்ளே, மூன்லைட் டிஸ்ப்ளே மற்றும் AI ஸ்மார்ட் பேக்லைட் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ColorOS 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமானவீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். இதுதவிர பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் மற்றும் ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங் உள்ளிட்டபல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா ஜி20

Nokia G20 Smartphone, Dual SIM 4G, 4GB RAM/64GB Storage, 48MP Quad Camera with 6.5” (16.51 cm) Screen | Silver, 4GB+64Gb
₹13,490.00
₹14,999.00
10%

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,951-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10எஸ்

Redmi Note 10S (Deep Sea Blue, 6GB RAM, 64GB Storage) -Super Amoled Display | 64 MP Quad Camera | Alexa Built in
₹12,999.00
₹16,999.00
24%

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும்
2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X