அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி,மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.!
சாம்சங், ரெட்மி, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே இந்pறுவனத்தின் சாதனங்கள் அதிளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி, மோட்டோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். 4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது கேலக்ஸி எம்21 2021.
மோட்டோ இ40
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 1.8GHz யூனிசோக் T700ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மோட்டோ இ 40 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ இ40 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications