Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ, ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி, விவோ நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்த ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ, ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரியல்மி, விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 8

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,484-விலையில் வாங்க முடியும். பின்பு 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 1,080x 2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம், 1,000 nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல்.

விவோY21

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ரியல்மி நார்சோ 50ஏ

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ. ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி சி 25 ஒய்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி 25 ஒய் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,699-விலையில் வாங்க முடியும். Realme C25Y சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. ரியல்மி சி 25 ஒய் ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி ஆர் பதிப்பு இன்டர்பேஸ் விருப்பத்துடன் இயங்குகிறது. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் 420 நிட் உச்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக Realme C25Y மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f1.8 லென்ஸுடன், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா AI பியூட்டி, HDR பயன்முறை, பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், போன்ற அம்சங்களுடன் ஃபில்டர்களை ஆதரிக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Realme C25Y முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவில் AI பியூட்டி அம்சமும் உள்ளது. இந்த சாதனம் 4ஜி LTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.

English summary
The best Vivo and Realme smartphones to buy at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X