Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த போக்கோ, ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

போக்கோ, ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த போக்கோ, ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த போக்கோ, ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்2 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்;க முடியும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ஏ16

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேசமயம் இதன் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்3

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ54

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்கமுடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்.

English summary
The best Poco and Oppo smartphones to buy at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X