Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் சிறந்த நோக்கியா, போக்கோ ஸ்மார்ட்போன்கள்.!

நோக்கியா, போக்கோ நிறுவனங்களின் பட்ஜெட் விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அசத்தலான கேமராக்கள், தனித்துவமான சிப்செட் உள்ளிட்ட பல நன்மைகளுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது.

பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் நோக்கியா, போக்கோ ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா, போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20.

நோக்கியா 5.4

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எம்3

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது போக்கோ எம்3. குறிப்பாக போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.பின்பு 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

போக்கோ எம்2 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்;க முடியும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். போக்கோ எம்2 ப்ரோ சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

English summary
The best Poco and Nokia smartphones to buy at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X