அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரியல்மி, ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் ரியல்மி, ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி, ஒப்போ ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்நிறுவனங்கள் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரியல்மி, ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ஏ15எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1520 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை வசதி இருக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. செல்பி வசதிக்கு 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ54
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை
வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499- விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு, Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.
ரியல்மி சி 25 ஒய்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி 25 ஒய் ஸ்மார்ட்போனை ரூ.11,990-விலையில் வாங்க முடியும். ரியல்மி ஸ்மார்ட்போனின் Realme C25Y சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. ரியல்மி சி 25 ஒய் ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி ஆர் பதிப்பு இன்டர்பேஸ் விருப்பத்துடன் இயங்குகிறது. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் 420 நிட் உச்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக Realme C25Y மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f1.8 லென்ஸுடன், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா AI பியூட்டி, HDR பயன்முறை, பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், போன்ற அம்சங்களுடன் ஃபில்டர்களை ஆதரிக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Realme C25Y முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவில் AI பியூட்டி அம்சமும் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் இந்த சாதனம் 4ஜி LTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications