அமேசான்: வாங்கச் சிறந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது என்றே கூறலாம்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் வாங்கச் சிறந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸமார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் + பிளஸ் ஆதரவு, கொரில்லா கிளாஸ் 5 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ARM Mali-G68 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது . பின்பு 65 வாட் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு பல சென்சார் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் 5.2, என்எஃப்சி, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 5ஜி ஸ்மார்ட்போன்.
ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.29,999-ஆக உள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 இல் இயங்குகிறது . இது 6.43-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 20: 9 விகிதத்தையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1200-AI சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை முன்பக்கத்தில் கொண்டுள்ளது. 5 ஜி, வைஃபை 6, புளூடூத் v 5.2, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட இணைப்பு விருப்பங்களும் இதில் உள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் 2 5 ஜி டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது வார்ப் சார்ஜ் 65w பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 158.9x73.2x8.25 மிமீ அளவையும் 189 கிராம் எடையும் கொண்டது.
ஒன்பிளஸ் 9 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.40,599-விலையில் வாங்க முடியும். இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் AMOLED உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 48 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் உடன் 2 எம்பி மோனோகிறோம் சென்சார் உடன் 16 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 9 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வருகிறது. 65W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது 6.55 இன்ச் திரவ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. எச்டிஆர் 10+ ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1100 நீட் பீக் பிரகாசம் கொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் குறித்து பார்க்கையில் 87.6% ஆகும். இதன் டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. 20:9 டிஸ்ப்ளே உடல் விகிதத்தையும் 420 பிக்சல் அடர்த்தியையும் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சம் இருக்கிறது. ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது
ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.33,999-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி.


Click it and Unblock the Notifications