அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ, மோட்டோ, ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!
விவோ, மோட்டோ, ரெட்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் இதுவரை இந்நிறுவனங்கள் சிறந்த தரம் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ,மோட்டோ, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ Y20G
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,143-விலையில் வாங்க முடியும். விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி + 2எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விவோ Y21
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,470-விலையில் வாங்க முடியும். விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.
நோக்கியா ஜி20
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20.
மோட்டோ இ40
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,650-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 1.8GHz யூனிசோக் T700ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மோட்டோ இ 40 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ இ40 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications