Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் தரமான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் பல அட்டகாசமான புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,951-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.

நோக்கியா 5.4

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி20 பிளஸ்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.7,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்பு 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி20 பிளஸ் சாதனத்தின் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். குறிப்பாக இந்த சாதனம் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி30

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,990-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது.. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30.

English summary
The best Nokia smartphones to buy at a budget price on Amazon.! Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X