Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா, ரியல்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் நோக்கியா, ரியல்மி, விவோ நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள சில போன்கள் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.

 பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா, ரியல்மி, விவோ ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா, ரியல்மி, விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி20 பிளஸ்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.7,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்பு 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி20 பிளஸ் சாதனத்தின் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். குறிப்பாக இந்த சாதனம் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

நோக்கியா சி30

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது.. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30.

விவோ Y21

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

ரியல்மி சி 25 ஒய்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி 25 ஒய் ஸ்மார்ட்போனை ரூ.11,845-விலையில் வாங்க முடியும். ரியல்மி ஸ்மார்ட்போனின் Realme C25Y சாதனம் டூயல் நானோ சிம் உடன் வருகிறது. ரியல்மி சி 25 ஒய் ஆண்ட்ராய்டு 11 உடன் ரியல்மி ஆர் பதிப்பு இன்டர்பேஸ் விருப்பத்துடன் இயங்குகிறது. இது 6.5' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1,600 பிக்சல் உடன் 20: 9 விகித விகிதம் மற்றும் 420 நிட் உச்ச பிரகாசத்தைக் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் T610 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காக Realme C25Y மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f1.8 லென்ஸுடன், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் f/2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமரா AI பியூட்டி, HDR பயன்முறை, பனோரமிக் வியூ, போர்ட்ரேட், டைம்லாப்ஸ், போன்ற அம்சங்களுடன் ஃபில்டர்களை ஆதரிக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, Realme C25Y முன்புறத்தில் f/2.0 லென்ஸுடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. முன்பக்க கேமராவில் AI பியூட்டி அம்சமும் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் இந்த சாதனம் 4ஜி LTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

English summary
The Best Nokia, Realme and Vivo smartphones to Buy at Budget Prices on Amazon Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X