அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா, மோட்டோ, விவோ ஸ்மார்ட்போன்கள்.!
நோக்கியா,மோட்டோ, விவோ நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கும் நோக்கியா,மோட்டோ, விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா சி01 பிளஸ்
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.6,298-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம், 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc SC9863a பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. மேலும் எல்இடி பிளாஸ்உட்பட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 5 வாட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி01 பிளஸ் ஸ்மார்ட்போன்.
நோக்கியா சி30
ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.10,998-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது.. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா சி30. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30.
மோட்டோ இ40
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,350-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 1.8GHz யூனிசோக் T700ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மோட்டோ இ 40 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ இ40 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல்
தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
விவோ எஸ்1
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எஸ்1 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். விவோ எஸ்1 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது.. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருக்கிறது. விவோ எஸ்1 சாதனத்தில் 4500 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications