அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!
இந்தியாவில் ரெட்மி, நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறுவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் விரைவில் பல 5ஜி ஸமார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி, நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..
ரெட்மி நோட் 11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். 4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது.
நோக்கியா ஜி10
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,449-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி ப்ராசஸர், இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் உள்ளது, 5050 எம்ஏஎச் பேட்டரி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், ப்ளூடூத் 5.0 வைஃபை 802.11 3.5 மிமீ ஹெட்ஜாக், கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
நோக்கியா ஜி20
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20.


Click it and Unblock the Notifications