அமேசான்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில மாதங்களில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கு சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா இ7 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோரோலா இ7 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,750-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சாதனம் 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மோட்டோரோலா இ7 பவர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது.
மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,600-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி, சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர புளூடூத் 5.0,3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்.
மோட்டோரோலா ஜி10 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60Hz refresh rate, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, ஜபிஎஸ்,புளூடூத் 5.0 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி10 பவர்.
மோட்டோ ஜி30
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,500-ஆக உள்ளது. 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு, ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 20W வேகமான சார்ஜிங் ஆதரவு, 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications