Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரெட்மி, மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் ரெட்மி, மோட்டோரோலா நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சஙகளுடன் பட்ஜெட் விலையில் இந்நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரெட்மி, மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

மேலும் இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ரெட்மி, மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஜி10 பவர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,850-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 60Hz refresh rate, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, என்எப்சி, ஜபிஎஸ்,புளூடூத் 5.0 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி10 பவர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி30

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,500-ஆக உள்ளது. 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு, ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் + 2 எம்பி மேக்ரோ சென்சார் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், 3.5 ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 20W வேகமான சார்ஜிங் ஆதரவு, 5,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி30 மாடல்.

English summary
The best Motorola and Redmi smartphones to buy at budget prices on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X