அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் மோட்டோரோலா, ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!
மோட்டோரோலா, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மோட்டோரோலா, ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோ இ40
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 1.8GHz யூனிசோக் T700ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மோட்டோ இ 40 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. மோட்டோ இ40 மாடல் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. குறிப்பாக செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,599-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி, சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர புளூடூத் 5.0,3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. ஒப்போ ஏ31 சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ54
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் 6.51' இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது நிலையான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 89.2 சதவீத டிஸ்பிளே டு பாடி விகிதம் மற்றும் 269 பிபி பிக்சல் அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 (எம்டி 6765) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ஏ 54 ஸ்மார்ட்போன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், இந்த ஸ்மார்ட்போனின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள பஞ்ச் ஹோல் கட்அவுட்டில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்போ A54 ஸ்மார்ட்போன் ஆனது 5,000 mah பேட்டரி மூலம் 18W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்திற்கான ஐபிஎக்ஸ் 4 சான்றிதழுடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 7.2 ஐ மூலம் இயக்குகிறது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ A54 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், இந்த சாதனம் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, யூஎஸ்பி டைப்-C ஆகிய அம்சங்களுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications