Home
Deal of the day

சீப்பாக மாறிய சித்தப்பு.. ரூ.25,000 பட்ஜெட்டுக்கு வந்துட்டாப்ல.. 8000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிரீமியமான ஸ்டார்ஷிப் இன்ஸ்பையர்டு டிசைன் மட்டுமல்லாமல், 8000mAh பேட்டரி, 144Hz அமோலெட் டிஸ்பிளே போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான டெக்னோ போவா கர்வ் 2 5ஜி (TECNO POVA Curve 2 5G) ஸ்மார்ட்போன், இப்போது நேரடி விலை குறைப்பு போக சீப்பாக கிடைக்கிறது.

இந்திய மார்கெட்டில் வெளியான போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருந்தது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,790 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் வாங்கி கொள்ள எந்த பேங்க் கார்டுகளும் தேவையில்லை. மார்கெட் விலையில் இருந்து நேரடியாக குறைப்பட்டு கிடைக்கிறது. கூடுதலாக வேண்டுமானால், பேங்க் டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம்.

சீப்பாக மாறிய சித்தப்பு.. ரூ.25,000 பட்ஜெட்டுக்கு வந்துட்டாப்ல!

ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் டிசைனை இதில் எதிர்பார்க்கலாம். ஸ்டார்ஷிப் இன்ஸ்பையர்டு டிசைன் மட்டுமல்லாமல், அசைமெட்ரிக்கல் கேமரா மாடியூல் கிடைக்கிறது. வெறும் 7.42 மிமீ தடிமனில் 8,000mAh பேட்டரியை பேக் செய்து கொடுத்துள்ளது. எஸ்ஜிஎஸ் 5-ஸ்டார் டிராப் ரெசிஸ்டன்ஸ் (SGS 5-Star Drop Resistance) உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர் உள்ளது. டிரிபிள் சிப்செட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது. மிஸ்டிக் பர்பிள் (Mystic Purple), ஸ்டார்ம் டைட்டானியம் (Storm Titanium) மற்றும் மெல்டிங் சில்வர் (Melting Silver) ஆகிய மூன்று கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

டெக்னோ போவா கர்வ் 2 5ஜி அம்சங்கள் (TECNO POVA Curve 2 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் கிடைக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹாய்ஓஎஸ் 16 (HiOS 16) வருகிறது.

டெக்னோ ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும், எல்லா ஏஐ 2.0 (ELLA AI 2.0) அசிஸ்டன்ட் உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2644 x 1208 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 3டி கர்வ்ட் டிசைனில் பிரீமியம் லுக் மற்றும் அவுட்புட் கொடுக்கிறது. ஏனென்றால், 1.5K ரெசொலூஷன் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

2304Hz PWM டிம்மிங் பிரிகொன்சி பெற்று கொள்ளலாம். எப்/1.7 அபெர்சர் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 2 எம்பி மேக்ரோ கேமரா சப்போர்ட் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ கேமராவை இந்த டெக்னோ போவா கர்வ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.

மேலும், ஐஆர் சென்சாருடன் (IR Sensor) கூடுதலாக கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர் கிடைக்காது, பாட்டம் போர்டெட் சிங்கிள் ஸ்பீக்கர் (Bottom-ported Single Speaker) மட்டுமே கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 20 பேண்ட்களின் சப்போர்ட் கொண்ட 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA) கனெக்டிவிட்டி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
TECNO POVA Curve 2 5G Price Cut Available At Rs 25790 instead of Rs 27999 Check Amazon Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X