அமேசான்: ரூ.25000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்கள்.!
விவோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சற்று உயர்வான விலையில் விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் விவோ ஸ்மார்ட்போனில் இருக்கும்.

அதேபோல் இந்நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ y33s ஸ்மார்ட்போன்
விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது விவோ ஒய்33 எஸ். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸகேனர், ஆக்ஸிலரோ மீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் போன்ற பல ஆதரவுகள் உள்ளன. விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனின் எடை 182 கிராம் ஆகும். மேலும் டூயல்-சிம், 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ ஒய்33 எஸ் ஸ்மார்ட்போன்.
விவோ Y73
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும். விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன்.
விவோ Y53s ஸ்மார்ட்போன்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y53s ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக விவோ Y53s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408×1080 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது
விவோ Y53s. அதேபோல் விவோ Y53s ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது விவோ Y53s. குறிப்பாக விவோ Y53s சாதனத்தில் டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது.
விவோ Y72 5G ஸ்மார்ட்போன்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y72 5G ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது. பின்பு விவோ Y72 5G ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080x2,408 பிக்சல்கள், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y72 5G. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான
விவோ Y72 5G ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications