அமேசான்: ரூ.23,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
சாம்சங், விவோ நிறுவனங்கள் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.23,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,999 வாங்க முடியும். கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர்உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
விவோ Y73
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y73 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y73 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 570 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர்10 ஆதரவு, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி, Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன்.
மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி, சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர புளூடூத் 5.0,3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்.
ஒப்போ எஃப்19 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,990-விலையில் வாங்க முடியும். OPPO நிறுவனம் ஒப்போ எஃப் 19 ப்ரோவில் 4310mAh பேட்டரியை வழங்கியுள்ளது. அதிக பயன்பாட்டில் கூட, இது ஒரு நாளைக்கு மேல் நீடிக்கும் பயனை தருகிறது. இதை ஒப்போ நிறுவனம் 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்தால் நீண்டகால பேட்டரி அனுபவத்தை செயல்படுத்தியுள்ளது. OPPO F19 Pro ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் பஞ்ச் ஹோல் AMOLED டிஸ்பிளேவை 90.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. ஒப்போ எஃப் 19 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 95 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. உங்கள் வீடியோகிராபி மற்றும் புகைப்படம் ஆர்வத்தை மேம்படுத்த ஒப்போ நிறுவனம் இந்த OPPO F19 Pro ஸ்மார்ட்போனில் AI- குவாட்-ரியர்-கேமராவை வழங்கியுள்ளது. இது 48 எம்பி சூப்பர் எச்டி அம்சம் கொண்ட பிரைமரி கேமராவுடன் வருகிறது. இது எந்தவொரு லைட்டிங் நிலையிலும் தெளிவான, உயர்தர வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. இதில் இரண்டாம் கேமராவாக 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சாருடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இது உங்கள் பயண சாகசங்களில், நீங்கள் காணும் இயற்கைக் காட்சிகளை வைடு ஆங்கிளில் புகைப்படம் எடுக்க இது அனுமதிக்கிறது. அடுத்த கேமராவாக 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 4 செ.மீ நெருக்கமான தூரத்துடன் உலகின் அதிசயங்களை நெருக்கமாகப் படம் பிடிக்க உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பூக்கள், இலைகள் மற்றும் அன்றாட வாழ்க்கை பொருட்களின் அழகான மற்றும் ஆழமான நெருக்கமான காட்சிகளை விவரங்களுடன் படம் பிடிக்க இது உதவுகிறது. இறுதியாக குவாட் கேமரா அமைப்பில் 2 மெகா பிக்சல் கொண்ட மோனோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications