அமேசான்: ரூ.10,000-விலைக்குள் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக விவோ, ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. அதன்படி இப்போது அமேசான் தளத்தில் ரூ.10,000-விலைக்குள் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
விவோ Y3s
விவோ Y3s ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் தளத்தில் தற்போது ரூ.9,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர 2ஜிபி ரேம், 32ஜிபி மெமரி, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ ஸ்மார்ட்போன்.
ரெட்மி 9
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. மேலும் ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி +2எம்பி என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 6.53-இன்ச் டிஸ்பிளே, 1600 x 720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி 9.
ரியல்மி நார்சோ 50ஐ
ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.7,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் ஆக்டோ-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு சென்சார் உட்பட பல்வேறு அமசங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஐ.
மோட்டோ ஜி5எஸ் பிளஸ்

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.6,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 1920 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். மேலும் குவால்காம் எம்எஸ்எம்8953 ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர் பிராசஸர், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி5எஸ் பிளஸ் மாடல். மேலும் இந்த சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 3000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பார்க் 7டி
அமேசான் தளத்தில் இந்த டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனை ரூ.8,499-விலையில் வாங்க முடியும். டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், ஹீலியோ 35 கேமிங் பிராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரிஇ 48எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications