அமேசான்: ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட், தரமான கேமரா உள்ளிட்டப பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே உலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.22,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லாகிளாஸ் 5 ஆதரவு, மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ்,
யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ22

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ22 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதி உடன் ARM மாலி-G52 2EEMC2 GPU ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22. மேலும் கேலக்ஸி ஏ22 சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22. டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ22.

சாம்சங் கேலக்ஸி எம்12

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும்.சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யுடிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி, Mali-G72 MP3 GPU ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன். அதேபோல்
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X