Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான சிப்செட், தரமான கேமரா வசதி என பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக சாம்சங் நிறுவனம் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையல் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், கார்னிங்
கொரில்லா கிளாஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது கேலக்ஸி எம்21 2021.

சாம்சங் கேலக்ஸி எம்12

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.4-இன்ச் டிஸ்பிளே, 800 நிட்ஸ் பிரைட்நஸ், கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் ப்ராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி ரியர் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸ் எம்31

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் எக்ஸிநோஸ் 9611 ஆக்டோ-கோர் ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

English summary
Stunning Samsung smartphone available at budget price on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X