Home
Deal of the day

அமேசான்: ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் உட்பட பல சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் சில சாதனஙகள் விலை உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்த அம்சங்களும் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.25, 000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 8 ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.19,400-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.53' இன்ச் கொண்ட 2.5D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், 19:5:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர், 4500 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா + 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா + 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா + 2 டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. பின்பு ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 ஐ MIUI 12.5 உடன் இயங்குகிறது. இது 6.43' இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,400 பிக்சல்கள் AMOLED டிஸ்ப்ளே, 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ், 4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி வரை UFS 2.2 சேமிப்பகத்துடன் வருகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் துளையுடன் மையமாக அமைந்துள்ள துளை-பஞ்ச் கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மி கே20

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.18,485-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 1080x2340 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட், 4000எம்ஏஎச் பேட்டரி, 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்ற பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 13எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன். குறிப்பாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
ஸ்மார்ட்போன்.4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்),யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9 ஆக்டிவ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600 பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 20: 9 விகித விகிதம் மற்றும் 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் மூலம் 6 ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் நானா சிம் அம்சத்துடன் செயல்படுகிறது. இது ரெட்மி 9 ஆக்டிவ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 12 இல் இயங்குகிறது. இது டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/2.2 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/2.4 லென்ஸுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பு ஒரு ஒற்றை LED ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் AI பியூட்டிஃபை 5.0 மற்றும் AI சீன் டிடெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2 லென்ஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

English summary
Stunning Redmi smartphones available for under Rs 25,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X