அமேசான்: ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனத்தின் ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த ரியல்மி ஜிடி நியோ மாடல்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மி 8

Realme 8 (Cyber Silver, 6GB RAM, 128GB Storage)
₹17,990.00

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990-ஆக உள்ளது. பின்பு 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED
டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 1,080x 2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம், 1,000 nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் +
8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி 5 ப்ரோ

Realme 5 Pro (Chroma White, 8GB RAM, 128 GB Storage)
₹16,799.00
₹17,999.00
7%

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உள்ளடக்க மெமரி வசதி ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,949-ஆக உள்ளது. குறிப்பாக 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்,
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்,
16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், 4,035 எம்.ஏ.எச் பேட்டரி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 5 ப்ரோ மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன்

realme GT 5G Master Edition (Luna White, 6GB RAM, 128GB Storage), Medium
₹24,999.00
₹27,999.00
11%

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 எஸ்ஒசி சிப்செட், Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4300 எம்ஏஎச் பேட்டரி,
65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30

realme narzo 30 (Racing Sliver, 6GB RAM, 128GB Storage) - MediaTek Helio G95 processor I Full HD+ display with No Cost EMI/Additional Exchange Offers
₹15,499.00
₹16,999.00
9%

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 மாடல்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30 மாடல். அதேபோல் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தவளைகளுக்கும் உடனுக்குடன் செய்திகளுக்கும் எங்களின் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X