Home
Deal of the day

அமேசான்: ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஒப்போ ஸமார்ட்போன் மாடல்கள்.!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் வசதியில்
அதிக கவனம் செலுத்துகிறது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஒப்போ ஸமார்ட்போன்கள்

அதேபோல் இந்நிறுவனம் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஒப்போ ஸமார்ட்போன் மாடல்களின் பட்டியலை விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும்1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி, colourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி. மேலும் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +
2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உட்ப பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்.

ஒப்போ எஃப்17

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, ஃபேஸ் அன்லாக், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்,4015 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி மெயின் கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி
கேமரா ஆதரவு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ எஃப்19 ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,990-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு, 2.2ஜிகாஹெர்ட்ஸ்
மீடியாடெக் ஹீலியோ பி95 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4310 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் ஒப்போ எஃப்19 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம்
48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை ரூ.13,490-விலையில் வாங்க முடியும். மேலும் ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி, ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன். அதேபோல் ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.

ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன்

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.52' இன்ச் 720 x 1600 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் டிஸ்பிளே, 4 ஜிபி ரேம் மற்றும்
64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஹீலியோ பி 35 சிப்செட், ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய கலர்ஓஎஸ் 7.2, 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 4230 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

English summary
Stunning Oppo smartphones available for under Rs 25,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X