அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஒப்போ ஸ்மார்ட்போன்கள்.!
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனதின் சிப்செட் வசதி மற்றும் சார்ஜிங் வசதி மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது.

விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒப்போ ஏ55
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.51-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ 35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி Mono கேமரா மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ55 மாடல்.
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ31. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர், 4230 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. அதேபோல் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ15
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. ஒப்போ ஏ 15 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே
அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே 720x1600 பிக்சல்கள் தீர்மானம், 89% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஒப்போ ஏ15 பாதுகாப்பு வசதிக்கென பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 4,230mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது, இதை சார்ஜ் செய்வதற்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.
ஒப்போ ஏ54
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,395-விலையில் வாங்க முடியும். இந்த ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன். அதேபோல் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா +2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி ஏஐ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம்.
ஒப்போ ஏ74 5ஜி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும்.ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080x2400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
ஒப்போ ஏ74 5ஜி. ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.குறிப்பாக ColourOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ ஏ74 5ஜி. இந்த பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications