Home
Deal of the day

அமேசான்: ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.!

மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான மோட்டோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்போம்.

மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.22,990-விலையில் வாங்க முடியும். மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி பிராசஸர் வசதி, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக்டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி 5ஜி.

மோட்டோரோலா ஜி9 பவர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி9 பவர் ஸ்மார்ட்போனை ஆமேசான் தளத்தில் 12,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி9 பவர் 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,640 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ
எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்று கேமரா இருக்கிறது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 60 மணிநேரம் வரை இருக்கும். இணைப்பு ஆதரவுகளாக வைஃபை, ப்ளூடூத் வி5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,988-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 ஆதரவு, ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஒசி, சிப்செட், 6000 எம்ஏஎச் பேட்டரி, டர்போபவர் 20 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர புளூடூத் 5.0,3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி40 ஃபியூஷன்.

மோட்டோ இ40


4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ இ40 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,490-விலையில் வாங்க முடியும். மோட்டோ இ 40 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா சென்சாரை குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் ஒரு டெப்த் சென்சார் மற்றும் அர்ப்பணிப்பு மேக்ரோ விஷன் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. குவாட் பிக்சல் தொழில்நுட்பம் கூர்மையான மற்றும் துடிப்பான புகைப்படங்களுக்கு 4x சிறந்த குறைந்த ஒளி உணர்திறனை வழங்குகிறது. இந்த புதிய மோட்டோ இ 4 ஸ்மார்ட்போன் ஃபேஸ் அன்லாக் உடன் பின்புற கைரேகை சென்சார் பேக் செய்கிறது. இது 1.8GHz யூனிசோக் T700 ஆக்டா-கோர் சிப்செட் மூலம் 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போனின் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜ் 64 ஜிபி உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியேக கூகிள் அசிஸ்டன்ட் கொண்ட அம்சத்துடன் வருகிறது. இது
5,000 எம்ஏஎச் பேட்டரியை 76 மணிநேர இசை ஸ்ட்ரீமிங், 14 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 10 மணிநேர வெப் சர்பிங் அம்சத்திற்காக வழங்கும் நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது.

English summary
Stunning Motorola smartphones available for under Rs 25,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X