Home
Deal of the day

ரூ.6999 மட்டுமே- ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்- அமேசானில் புகுந்து விளையாடுங்க

அமேசான் சலுகை தின அறிவிப்பில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதற்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இதுதான்- அமேசான்!

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனானது ரூ.10,000-த்துக்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போனானது மெட்டாலிக் பர்ப்பிள் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.9499 என்ற விலையில் இருந்த நிலையில் தற்போது அமேசான் சலுகை தின அறிவிப்பில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.8499 என கிடைக்கிறது. இந்த சலுகையானது இன்னும் 13 மணி நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் ஹீலியோ ஜி35 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவுடன் ஏஐ போர்ட்ரெய்ட் அம்சத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனானது ஃப்ராஸ்ட் வைட் வண்ண விருப்பத்தோடு வருகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது இன்னும் 13 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 6.43 இன்ச் அளவு டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இதன் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி95 ஆக்டோ கோர் மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம் மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.6999 என்ற விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 13 எம்பி ரியர் கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ஏஐ சீன் எச்டிஆர் ஆதரவு, 5 மெகாபிக்சல் முன்புற கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயங்குகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இது 10 வாட்ஸ் வயர்ட் சார்ஜ் வசதியோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனானது ரூ.12,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9499 என்ற விலையில் இருக்கிறது. இந்த சலுகையானது இன்னும் 14 மணிநேரத்தில் நிறைவடைகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வங்கி சலுகைகளும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி கேமரா முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. இது 6000 எம்ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி ஆதரவோடு வருகிறது. ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது.

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது மின்ட் க்ரீன் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.7999 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.7499 என விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமராவுடன் வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ ப்ராசஸர் இயக்கத்துடன் வருகிறது.

English summary
Smartphones under Rs 10,000 are available at the best discounted prices on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X