அமேசான்: ரூ.25,000-விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
இந்த ஆண்டு அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சாம்சங், ஒன்பிளஸ், விவோ, ஒப்போ நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன அம்சங்களுடன் வருகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.25,000-விலையில் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.22,999-விலையில் வாங்க முடியும். கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா
ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி
பொருத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும். ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி, OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4500 எம்ஏஎச் பேட்டரி, 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதேபோல் 5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 16எம்பி செல்பீ கேமராவைக்
கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல்.
விவோ வி21இ 5ஜி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.24,990-விலையில் வாங்க முடியும். இந்த விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன். விவோ வி21இ 5ஜி சாதனத்தின் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதாவது 64எம்பி பபிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ
கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக மீடியாடெக் Dimensity 700 சிப்செட்
ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். பின்பு FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் மிக விரைவில் சார்ஜ் செய்ய முடியும். 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, மற்றும் ஜிபிஎஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ எஃப் 17 ப்ரோ
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 4015எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W வூக் ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications