அமேசான்: ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!
ரெட்மி, சாம்சங், ரியல்மி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரெட்மி, சாம்சங், ரியல்மி நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப்
பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,499- விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு, Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.
சாம்சங் கேலக்ஸி எஃப்22
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனை ரூ.13,290-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எஃப்22 மாடல் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் sAMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 700x1,600 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எஃப்22 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 3.1 மூலம் இயங்குகிறது இந்த சாதனம். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். சாம்சங் கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் வி 5, என்எப்சி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எஃப்22 ஸ்மார்ட்போன் மாடல்.
ஒப்போ ஏ15எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன், 720x1520 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை வசதி இருக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ஹீலியோ பி35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4230 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. செல்பி வசதிக்கு 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications