Home
Deal of the day

அமேசான்: ரூ.10000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

ரெட்மி, ரியல்மி, மோட்டோ உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் சில அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: ரூ.10000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள்5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி 9ஏ

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மாhர்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,299-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்தது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 50ஐ

4ஜிபிரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் ப்ரசாஸர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.7,990-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் UNISOC SC9863A ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு கோ 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமராஅம்சங்கள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுன் இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். டூயல் சிம் ஸ்லாட்,
Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, மைக்ரோ USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக், GPS, GLONASSஉள்ளிட்ட பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா சி20 பிளஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11,ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி,3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் இந்த சாதனத்தை தேர்வு செய்வது நல்லது. நீண்ட நேரம் சார்ஜ் குறையாமல் இந்த சாதனத்தை பயன்படுத் முடியும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Smartphones available on Amazon for less than Rs 10,000! Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X