குறுகிய காலம் மட்டுமே- ஸ்மார்ட்போன்கள், பவர் பேங்கிற்கு அதீத தள்ளுபடி: அமேசான் அட்டகாச சலுகை!
அமேசான் சலுகை தின அறிவிப்பில் ஸ்மார்ட்போன்கள், பவர் பேங்க், லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது.

ஐக்யூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன்:
ஐக்யூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த சாதனம் ஆர்க்டிக் டான் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.29,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,990 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 பரிமாற்ற சலுகை கிடைக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. 20% தள்ளுபடி உடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 44 வாட்ஸ் ஃப்ளாஸ் சார்ஜிங் டெக்னாலஜி வசதியோடு வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங் பதிவு, சூப்பர் நைட் மோட் அம்சத்தோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் முன்புற கேமராவை கொண்டிருக்கிறது. 2 வருடத்துக்கான ஆண்டாய்டு அப்டேட் அணுகலோடு இது கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் உட்பட வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி சாதனம்
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி சாதனத்துக்கு சிறந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 29 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான தள்ளுபடி 13 மணிநேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் உள்ளிட்ட சலுகைகளோடு வழங்கப்படுகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன ஸ்கை ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ கோர் 2 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 6.5 இன்ச் டிஎஃப்டி இன்பினிட்டி வி கட் டிஸ்ப்ளே, எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவும் இருக்கிறது. 48 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உடன் வருகிறது. முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் இருக்கிறது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 11 ஒன் யூஐ 3.1 இயக்க ஆதரவோடு வருகிறது.
ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்
ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது விண்டேஜ் ப்ரான்ஜ் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,000 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி ஆக்டோ கோர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 5 மெகாபிக்சல் டெலிமேக்ரே மற்றும் போர்ட்ரெய்ட் லென்ஸ் உடன் வருகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டாட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. எச்டிஆர் 10 ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் வங்கி தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது ஐசி ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் விலை ரூ.34999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த சாதனத்தின் விலை ரூ.25,999 ஆக இருக்கிறது. இந்த சலுகையானது 13 மணிநேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனமானது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 5 எம்பி ஆழ கேமரா என மூன்று கேமரா உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஒன் யூஐ 3.1 ஆதரவோடு வருகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 10000 எம்ஏஎச் பவர் பேங்க்
ஒன்பிளஸ் 10000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது சிறந்த தள்ளுபடியுடன் வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.1299 என்ற விலையில் கிடைத்த நிலையில் தற்போது இந்த பவர் பேங்க் ரூ.899 ஆக இருக்கிறது. இந்த சலுகையானது 13 மணி நேரத்துக்கு மட்டுமே கிடைக்கிறது. 31 சதவீதம் சலுகையோடு இந்த சாதனம் கிடைக்கிறது. இது கருப்பு மற்றும் பச்சை வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. யூஎஸ்பி மற்றும் மைக்ரோ யூஎஸ்பி இணைப்பு ஆதரவு இதில் இருக்கிறது. 10000 எம்ஏஎச் பேட்டரி அளவு கொண்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அணுகல், டூயல் யூஎஸ்பி போர்ட்கள், 2 டி மைக்ரோ யூஎஸ்பி டைப் சி கேபிள் ஆதரவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications