65% சலுகையுடன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021!

|

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தினம் வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் நாம் எதிர்பார்த்த பல்வேறு புதிய சாதனங்களையும் சலுகை விலையில் வாங்க முடியும். இந்த சலுகை தின அறிவிப்பில் பலரும் சாதனங்களை சலுகையுடன் வாங்கி பலன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

65% சலுகையுடன் ஸ்மார்ட் டிவி: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது.

தியேட்டர் மூடிவரும் காரணத்தால் புதுத் திரைப்படங்கள் ஓடிடி தளத்திலேயே வெளியாகி வருகின்றன. இதை பார்ப்பதற்கு சிறந்த திரை அனுபவம் மிக்க ஸ்மார்ட்டிவிகளை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு சலுகையோடு வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் விற்பனை தளங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்டிவிகளுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்டிவிகளுக்கு 65% வரை தள்ளுபடிகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பரிமாற்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதேபோல் 24 மாதங்கள் வரை நோகாஸ்ட் இஎம்ஐ வழங்கப்பட இருக்கிறது. சிறந்த சலுகைகளுடன் கிடைக்கும் பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (பிளாக்)

Mi 108 cm (43 Inches) 4K Ultra HD Android Smart LED TV 4X|L43M4-4AIN (Black)

எம்ஐ 43 இன்ச் 4கே ஸ்மார்ட்டிவி கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி வசதியோடு வருகிறது, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியோடு வருகிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், ப்ளூ ரே ஸ்பீக்கர் அல்லது கேமிங் கன்சோல் ஆதரவோடு வருகிறது. இதில் 20 வாட்ஸ் அவுட்புட் ஸ்பீக்கர்கள் இருக்கிறது. டால்பை ஆடியோ + டிடிஎஸ் எச்டி அணுகலோடு வருகிறது. இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஆண்ட்ராய்டு டிவி 9.0 ஆதரவோடு இது வருகிறது. இதில் கூகுள் அசிஸ்டென்ட், 4கே எச்டிஆர் 10 இணைப்பு ஆதரவை கொண்டிருக்கிறது.

இஃபால்கான் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி

iFFALCON 108 cm (43 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV 43U61 (Black) (2021 Model)

இஃபால்கான் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 2021 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி அணுகலோடு வருகிறது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, 30 வாட்ஸ் அவுட்புட் டால்பி ஆடியோ பவர் ஸ்பீக்கர்கள் இணைப்போடு வருகிறது. ஆண்ட்ராய்டு 9.0 ஆதரவுடன் வருகிறது. மேலும் இதில் நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ அணுகலோடு வருகிறது. வைஃபை, யூஎஸ்பி, எச்டிஎம்ஐ இணைப்பு ஆதரவோடு 4கே அம்சத்தோடு வருகிறது. இதில் நெட்பிளிக்ஸ், ஜீ5, கூகுள் ப்ளே ஸ்டோர், பிரைம் வீடியோ, டிசிஎல் சேனல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், யூடியூப் உள்ளிட்ட அணுகலோடு வருகிறது.

சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ப்ரோ அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (2021 மாடல்)

Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)

சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ப்ரோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது கருப்பு நிற வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. கிரிஸ்டல் 4கே ப்ரோ அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவியானது 3840 x 2160 ரெசல்யூஷன் வண்ண விருப்பத்தில் வருகிறது. இதில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, நெட்பிளிக்ஸ், அமேசாந் பிரைம், ஜீ5, யூடியூப், ஹாட்ஸ்டார் அணுகலும் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்டிவியில் வைஃபை, யூஎஸ்பி ஈதர்நெட், எச்டிஎம்ஐ போர்ட் இணைப்பு ஆதரவோடு வருகிறது. அல்ட்ரா 4கே ஹெச்டி எல்இடி பேனல், ஒரு பில்லியன் கலர், ஏர் ஸ்லிம் டிசைன், எச்டிஆர் 10+ ஆதரவோடு இது வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.50000 என்ற விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

எல்ஜி 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (2021 மாடல்)

LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)

எல்ஜி 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவியானது ராக்கி பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 4கே அல்ட்ரா எச்டி ஆதரவோடு வருகிறது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி அணுகலை கொண்டிருக்கிறது. செட் டாப் பாக்ஸ் இணைப்புக்கு 2 எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூ ரே ப்ளேயர்ஸ், கேமிங் கன்சோல், 1 யூஎஸ்பி போர்ட் ஆதரவோடு வருகிறது. இது 4கே ஆதரவை கொண்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Smart TVs Get Discounts Up to 65% on Amazon Great Indian Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X