Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தரமான டிஸ்பிளே மற்றும் தனித்துவமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான்:பட்ஜெட் விலையில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு அதிகமாக 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில்
வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் Mali-G72 MP3 GPU ஆதரவும் உள்ளது. மேலும் One UI Core சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம்
48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்32

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்குமிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்12

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தைஅடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம்
நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி எம்11

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,970-க்கு வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம் 11 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதோடு இடது மூலையில் பஞ்ச் ஹோல் வசதியும் உள்ளது. இந்த தொலைபேசி 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோபதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்சில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வரை ஆதரிக்கிறது, இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவும் உள்ளது. 4 ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் ஆகியவை இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும்
பட்ஜெட் விலைக்கு தகுந்தபடி உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

English summary
Samsung smartphones available with stunning features on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X