Home
Deal of the day

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் சாமசங் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் நிறுவனம் ஆப்பிள நிறுவனத்திற்கு போட்டியாக பல தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் சாமசங் ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக இந்த சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் சில சாம்சங் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.69,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச்dynamic AMOLED டிஸ்பளே வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 3200 x 1440 பிக்சல் தீர்மனம்,8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 2ஜிகாஹெர்ட்ஸ்
எக்ஸிநோஸ் 990 ஆக்டோ-கோர் சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி, ஃபேஸ் அன்லாக், கைரேகை சென்சார் உள்ளிட்டம பல்வேவறு பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி டெலி கேமரா+ 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி வைடு கேமரா+விஜிஏ டெப்த் கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி நோட் 20

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.44,990-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களை கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் தரமான எக்ஸிநோஸ் 990 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மாடல். கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 20. அதேபோல் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேற ஆதரவுகள் இவற்றுள அடக்கம். சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 4G, இரட்டை சிம் + இசிம், புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி S20 FE

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.41,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே, 20: 9 அளவிலான திரை விகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC சிப்செட், 12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா, முன்பக்க கேமராவிலும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உள்ளது, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 4,500 எம்ஏஎச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், எடையில் 190 கிராம் என பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி S20 FE.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா

12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,800-ஆக உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன்
புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பி செல்பீ
கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 2ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 990 ஆக்டோ-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.42,899-விலையில் வாங்க முடியும். கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்ஸிநோஸ் 9810 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி72 எம்பி18ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி நோட்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ்லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். கேலக்ஸி நோட்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட
பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்

English summary
Samsung smartphones available with quality features on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X