Home
Deal of the day

அமேசான்: ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஒப்போ, விவோ, மோட்டோ நிறுவனங்களை விட தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது சாம்சங் நிறுவனம். அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமேசான்: ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்;களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் தரமான சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 20: 9 ஸ்க்ரீன்
ரேஷியோ,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி. கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வசதியுடன் உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். 5ஜி,4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி/ ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.20,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர் வசதி உள்ளது. குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 கஸ்டம் ஸ்கின் மூலம் இயங்கும் இந்த அசத்தலான கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். சாம்சங் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1,
ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11,
புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்12

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 மாடல்.

English summary
Samsung smartphones available for less than Rs 30,000 on Amazon! Here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X