அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக தனித்துவமான சிப்செட், தரமான கேமரா என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்புஉள்ளது.

அதேபோல் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் ஏ21எஸ்
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,990-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதம், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பிமேக்ரோ கேமரா
+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி ஏ12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில்வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச்
பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல். வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்
+ 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தைஅடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12
ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.
சாம்சங் கேலக்ஸி எம்11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,989-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம் 11ஆனது 6.4 இன்ச் எச்டி 10 இன்ஃபினிட்டி-ஓ எல்சிடி டிஸ்ப்ளே 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் கிடைக்கிறது. அதேபோல் இந்த சாதனம் 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி மூலம் இயக்கப்படுகிறது.கேலக்ஸி எம் 11 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை,5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோபதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது. இது
திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ஒரு துளை-பஞ்சில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி வரை ஆதரிக்கிறது, இதில் 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. தொலைபேசி ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் கைரேகை சென்சார் ஆதரவும் உள்ளது. 4 ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் ஆகியவை இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications