4000 முதல் 10,000 விலையில் கிடைக்கும் பெஸ்ட் போன்கள்.! ஒவ்வொன்னும் பெஸ்டான ரகம்.!
இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ குறைந்த விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை கிஃப்ட் ஆக வழங்க ஐடியா இருக்கிறதா? இல்லை, உங்களுக்கே ஒரு புது ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அதுவும் குறைந்த விலையில் பெஸ்டான அம்சங்களுடன் இருக்கக் கூடிய ஒரு ஸ்மார்ட்போன் தேடுகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.

ரூ.4,000 விலை முதல் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லேடஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இந்த பதிவில் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் எல்லாம் தலைசிறந்த பிராண்ட்களில் இருந்து கிடைக்கும் பெஸ்டான மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Samsung, Redmi, Realme, Tecno, Jio போன்ற நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் மாடல்களை தொகுத்துள்ளோம். சரி, வாங்க லிஸ்டை பார்க்கலாம்.
1. JioFi Next Smartphone
இந்தியாவியில் கிடைக்கும் மிகவும் மலிவான நம்பகமான ஸ்மார்ட்போன் மாடல் என்றால், நாம் இந்த JioFi Next ஸ்மார்ட்போன் மாடலை தான் குறிப்பிட வேண்டும். இதன் அசல் விலை ரூ. 7,299 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால், இந்த டிவைஸை வெறும் ரூ. 4,810 என்ற விலையில் வாங்கிடலாம். உங்கள் பழைய பிராண்ட் போனை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.4,500 வரை விலை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. Redmi A1
விலை கம்மியாக இருக்க வேண்டும், ஆனால், ஸ்மார்ட்போன் லுக் செமயாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு இந்த Redmi A1 தான் சரியான சாய்ஸ். இந்த Redmi A1 ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 6,299 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இன்றைய சலுகையில் இதன் மீது ரூ. 2,700 (30%) தள்ளுபடி கிடைக்கிறது.
3. realme narzo 50i Prime
சமீபத்தில் வெளியான பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும். இந்த realme narzo 50i Prime ஸ்மார்ட்போன் டிவைஸின் அசல் விலை ரூ. 8,425 ஆகும். இன்று அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம், இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 6,666 விலையில் வாங்கிட முடியும். இதன் மூலம் உங்களுக்கு 1,759 (21%) தள்ளுபடி கிடைக்கிறது.
4. Tecno Spark 9
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் உங்களுக்கு 7ஜிபி எக்ஸ்பண்டபிள் ரேம் உடன் வருகிறது. மலிவான விலையில் அதிக ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், நீங்கள் செலக்ட் செய்ய வேண்டிய மாடல் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 11,499 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 7,769 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 3,730 (32%) வழங்கப்படுகிறது.
5. realme narzo 50A Prime
மலிவு விலையில் 3 கேமராவுடன் ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அப்படியானால், உங்கள் தேர்வு இந்த realme narzo 50A Prime ஆக இருக்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 14,499 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையின் மூலம், இந்த சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 9,499 விலையில் வாங்கிடலாம். இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ.5,000 (34%) தள்ளுபடி கிடைக்கிறது.
6. Samsung Galaxy M13
சாம்சங் பிராண்டில் இருந்து, ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போன் மலிவு விலையில் வாங்க நினைத்தால், உடனே இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த Samsung Galaxy M13 டிவைஸ், இப்போது வெறும் ரூ. 9,499 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த சலுகை மூலம் உங்களுக்கு ரூ. 5,000 (34%) தள்ளுபடி கிடைத்து, பணத்தை மிச்சம் பிடிக்க வாய்ப்பும் கிடைக்கிறது.
இந்த பிராண்டட் ஸ்மார்ட்போன் சாதனங்களை நீங்கள் தாராளமாக நம்பி வாங்கலாம். மலிவு விலையில் டீசெண்டான அம்சங்களைக் கொண்டுள்ள இந்த சாதனங்கள் உண்மையிலேயே பெஸ்டான சாய்ஸ் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications